மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

நாகை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு உள்ள, அரசு மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறை பகுதியில் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
x
நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில்,  இதற்காக ஒரத்தூர் பகுதியில் நிலம்தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில், புதிய மருத்துவக் கல்லூரியை, மயிலாடுதுறையில் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி  இல்லாததால், சிகிச்சைக்காக தஞ்சை அல்லது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் நிலை உள்ளதாக தெரிவித்தனர். மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லுரி அமைப்பதற்காக நீடூர் பகுதியில் 21 ஏக்கர் தனியார் நிலத்தை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர். 
மருத்துவக் கல்லூரி தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்