போலி ஆவணம், ஆள் மாறாட்டம் செய்த கும்பல் : விசாரணை நடத்தி கைது செய்த போலீசார்

சென்னையில் போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்யும் இரண்டு நில அபகரிப்பு கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணம், ஆள் மாறாட்டம் செய்த கும்பல் : விசாரணை நடத்தி கைது செய்த போலீசார்
x
சென்னையில் போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்யும் இரண்டு நில அபகரிப்பு கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி பருத்திப்பட்டு  பகுதியை சேர்ந்த கீதா என்பவரின் புகாரின் பேரில்,பவானி மற்றும் சங்கீதாவை  போலீசார், கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய தேவி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதே போன்று போலி ஆவணம் மற்றும் ஆள்மாறட்டம் செய்து நந்தம்பாக்கம் பகுதியில் 1.5 கோடி நிலத்தை அபகரிக்க முயன்ற ரகுகுமார்,ஜெயக்குமாரி, மற்றும் போலி ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட பொதிராஜ்  ஆகியோரை போலீசார், கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்