"திமுக எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு" - வழக்கு விசாரணை டிசம்பர் 19-க்கு தள்ளிவைப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய கனிமொழி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு - வழக்கு விசாரணை டிசம்பர் 19-க்கு தள்ளிவைப்பு
x
தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர் சந்தான குமார் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கனிமொழி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்க சந்தானகுமாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம், கனிமொழி தன்னுடைய எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்