பாரதியார் பிறந்த நாளையொட்டி ஜதி ஊர்வலம் - அமைச்சர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு

மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் ஜதி ஊர்வலம் நடைபெற்றது.
x
வானவில் பண்பாட்டு மையம்  மற்றும் தமிழக அரசு  சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முகப்பிலிருந்து பாரதி நினைவு இல்லம் வரை  ஜதி பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ , மாஃபா பாண்டியராஜன் ,  பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிடோர் பங்கேற்றனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில்  பேசிய இல.கணேசன், பாரதியாரின் பூரண சுயராஜ்யம் இன்னும் வரவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ விரைவில் உலக தமிழ் மாநாடு  நடத்தப்பட உள்ளதாக கூறினார். 

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , உலக பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் தமிழ் இருக்கைக்கு பாரதியாரின் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறினார்.  Next Story

மேலும் செய்திகள்