"கேங்மேன் பணிக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.
x
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி,  மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கான தேர்வு, தகுதியின் அடிப்படையில் வெளிப்படையாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு ஏமாந்தால் அதற்கு தமிழக அரசு பொறுப்பேற்காது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்