தமிழகத்தில் பரவலாக மழை

சென்னை, திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் பரவலாக மழை
x
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. எழும்பூர், சேத்துப்பட்டு,பெசன்ட்நகர், வடபழனி, கிண்டி  மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மிதமான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

* திருவாரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்தது. திருவாரூர் நகர் பகுதி, நன்னிலம், திருத்துறைப் பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

* தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், அண்ணா நகர் பகுதியில் சலவை கூடத்தை மழைநீர் சூழ்ந்து கொண்டது.  இதனால்,அங்கு பணிபுரியும் சலவை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* சிதம்பரம் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால், பரங்கிப்பேட்டை,சின்னூர், சி.புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் 4-வது நளாக, இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.


Next Story

மேலும் செய்திகள்