ரூ.58 கோடியில் உருவாகும் ஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரியில் நினைவிடத்தை திறக்க அ.தி.மு.க திட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
ரூ.58 கோடியில் உருவாகும் ஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரியில் நினைவிடத்தை திறக்க அ.தி.மு.க திட்டம்
x
சென்னை மெரினாவில், 58 கோடி ரூபாய் செலவில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. சர்வதேச தரத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான தனி வளாகம், செயற்கை நீரூற்றுகள், வண்ண மீன் குளங்கள், ஜெ., புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிக்கூடம் உள்ளிட்டவையும் அமையவுள்ளன. தற்போது, கட்டுமான பணி 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தாண்டு பிப்ரவரியில், ஜெயலலிதா பிறந்தநாளில்  நினைவிடத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறக்க, அ.தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்