ராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த காவலர் கைது

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில், போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த ராமநாதபுரம் காவலர் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த காவலர் கைது
x
ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலக தொலைபேசிக்கு, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் கொடுத்து காவலர் பணியில்  சிலர் சேர்ந்து பணிபுரிந்து வருவதாக, புகார் வந்தது. இதுகுறித்து, எஸ்.பி. வருண்குமார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், கமுதி அருகே உள்ள ஓ.கரிசல் குலத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் சிக்கினார். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் என்பவர் போலி சான்றிதழ் தயாரித்து வழங்குவதாக விசாரணையில் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சீமானை பிடித்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில், திருச்சி ஆயுதப் படையில் பணியாற்றி வந்த  காவலர் மணிராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த தனிப்படை போலீசார், போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்த ஒருவர் மற்றும், கடந்த மாதம் நடந்த போலீஸ் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற 5  பேரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான  ஒதுக்கீட்டில் போலீஸ் வேலையில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை, சரிபார்த்து உறுதி செய்யுமாறு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு எஸ்.பி. வருண்குமார் பரிந்துரை செய்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்