"சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்க கூடாது" - நித்தியானந்தா
பதிவு : டிசம்பர் 04, 2019, 09:09 AM
குஜராத் ஆசிரமம் மூடல், ஆசிரம நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு என அடுத்தடுத்த சூறாவளிகள் ஒரு பக்கம் இருந்தாலும் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் தன் பேச்சால் கவனம் ஈர்த்திருக்கிறார் நித்தியானந்தா
சர்ச்சை, சலசலப்பு என எதுக்கும் அஞ்சாமல் சத்சங்கம் என்ற ஒன்றில் மட்டுமே தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் நித்தியானந்தா. 

சரியாக 7 மணிக்கு ஆன்லைனில் ஆஜராகும் நித்தி இதுநாள் வரை தியான வகுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், இப்போது தன்னை விமர்சிப்பவர்களை பற்றியும் பேசி கலகலப்பூட்டி வருகிறார். 

இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் தான் இதுபோல் கூலாக இருக்க காரணம் என்ன என்றும் அவர் விளக்குகிறார்.

என்னை எல்லாம் யாரும் எப்போதும் பயமுறுத்த முடியாது நேரடியாக சவால் விடும் நித்தி, தான் யார் என்பது குறித்தும் கலகலப்பாக பேசியிருக்கிறார்.

நித்தி மீதான புகார்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவர் இணையதளத்தை பக்கத்தை பார்வையிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையும் தன் பாணியிலேயே பாயிண்ட் வைத்து பேசியிருக்கிறார் நித்தி.

கைலாசா என்ற நாட்டிற்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கும் நித்தி, பாஸ்போர்ட், அமைச்சரவை என ஒரு பக்கம் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் ஆன்லைனில் மணிக்கணக்கில் பேசி அசத்தி வருகிறார்.

எல்லாம் ஓகே... ஆனால் தான் எங்கே இருக்கிறேன் என்ற ஒரு கேள்விக்கு அவர் பதில் தருவாரா? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது... 


பிற செய்திகள்

மீன்கடையை காலால் எட்டி உதைத்த பேரூராட்சி ஊழியர்கள்

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில், ஊரடங்கு விதிமுறைகள் குறித்து, ஆய்வு செய்த பேரூராட்சி ஊழியர்கள், சாலையோரம் மீன்கடை வைத்திருந்த பெண்ணை கடையை அகற்ற கூறியுள்ளனர்.

35 views

உணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

11 views

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் மாயம்

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

11 views

பேஸ்புக்கில் 14 வயது சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் ஷபின். 22 வயதான இவரின் பிரதான பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடம் சாட் செய்வது தான்.

14 views

பல மணி நேரம் காத்துக் கிடந்த மாற்று திறனாளிகள் - அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள்

தமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் அடையாள அட்டைகளை வாங்குவதற்காக எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

8 views

தரமற்ற உணவு, மருந்து வழங்குவதாக புகார் - கொரோனா நோயாளிகள் வெளியிட்ட வீடியோ

கன்னியாகுமரி மாவடம் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், தரமற்ற உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.