"நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு - நீதிமன்றம் கேள்வி?"

நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு - நீதிமன்றம் கேள்வி?
x
* ஏரி, குளம், அருவி, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்படும உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

* அதில், கடந்த 2014ம் ஆண்டு மட்டும் நீரில் மூழ்கி 11 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்ததாக சான்றுடன் சுட்டிக்காட்டிய அவர், 90 சதவிகிதம் பேர், 12 வயதுக்கு குறைவானவர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

* கடற்கரை, சுற்றுலா தலம், கோயில் குளம், அருவி ஆகிய இடங்களில் நீச்சலில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவினரின்,  24 மணி நேர பாதுகாப்பை ஏற்படுத்த அவர் கோரினார். 

* இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அமர்வு கடற்கரை பகுதிகளில் உயிரிழப்புகளை தடுப்பதற்காக இதுவரை மாநில அரசுக்கு  நிதி ஒதுக்கிய விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

* கடற்கரை,  குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் 

மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய இந்து அறநிலை இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டு விசாரணை 4 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்