அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க ரூ.604 கோடி ஒதுக்கீடு : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
பதிவு : டிசம்பர் 03, 2019, 04:08 PM
சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க, 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க, 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 லட்சத்து 19 ஆயிரம் சர்க்கரை அட்டைதாரர்கள், அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ள தமிழக அரசு நவம்பர் 19 முதல் 29ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இதைப் பயன்படுத்தி 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள விண்ணப்பித்தனர். புதிதாக அரிசி அட்டைக்கு மாறிய அந்த பயனாளிகளுக்கு 20 ஆயிரத்து 389 டன் அரிசி கூடுதலாக வழங்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாதமும் 50 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 604 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளதாக,  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா விவகாரம் : வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி உத்தரவு

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

சமஸ்கிருத துறையில் இஸ்லாமிய பேராசிரியர் : எதிர்க்கும் பனாரஸ் பல்கலை. மாணவர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறையில் இஸ்லாமிய பேராசிரியர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

8 views

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்ற வீராங்கனை ஜோதி சுரேகாவுக்கு உற்சாக வரவேற்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்த 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனை ஜோதி சுரேகாவுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

4 views

"பாகிஸ்தானில் இருந்து பணம் வராததால் தவானை கைவிட்டுள்ளனர்" - ஷியா வக்பு வாரியத் தலைவர் ரிஸ்வி கருத்து

ராஜீவ் தவான் முன்னணி வழக்கறிஞர் என்றும், அதிக கட்டணம் வாங்குபவர் என்றும் ஷியா வக்பு வாரியத் தலைவர் வாஷிம் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

4 views

போபால் விஷவாயு விபத்து : 35ஆம் ஆண்டு நினைவுதின பேரணி

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 35-ஆம் ஆண்டு நினைவு தின பேரணி நடைபெற்றது.

8 views

கன்னியாஸ்திரியின் 'கர்த்தாவின்டே நாமத்தில்' : பாதிரியார்கள் மீதான பாலியல் புகார் பற்றி விவரிப்பு

கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து கேரள கன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய 'கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.