கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் ஏரிகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் ஏரிகள்
x
தற்போது பெய்து வரும் கனமழையால் மூவாயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 989 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. மூவாயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது ஆயிரத்து 639 மில்லியன் கன அடியாக உள்ளது. ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 96 மில்லியன் கன அடியாக உள்ளது. மூவாயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு தற்போது  749 மில்லியன் கன அடியாக இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்