கஞ்சா விற்க வலியுறுத்தும் போலீசார் - பெண் புகார்

திருந்தி வாழும் தம்மை மீண்டும் கஞ்சா விற்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துவதாக பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா விற்க வலியுறுத்தும் போலீசார் - பெண் புகார்
x
திருந்தி வாழும் தம்மை மீண்டும் கஞ்சா விற்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துவதாக பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காஞ்சரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த பஞ்சு என்ற பெண் மற்றும் அவரது தாயார் மீது கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக கஞ்சா தொழிலில் ஈடுபடாமல், இருவரும் திருந்தி இட்லி கடை நடத்தி வந்துள்ளனர். அவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கஞ்சா விற்க வலியுறுத்தியதோடு, இருபதாயிரம் பணம் கொடுக்காவிட்டால் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக போய் வழக்கு போடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் பெற்ற பிறகும் போலீசார் தம்மை தேடி வருவதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்