மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு : இன்று மாலை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, நீட் நுழைவுத்தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு : இன்று மாலை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
x
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, நீட் நுழைவுத்தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குவதாக தெரிவித்துள்ளது.  www.ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் வரும்  31ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த ஜனவரி ஒன்று வரை தேசிய தேர்வு முகமை அவகாசம் அளித்துள்ளது. விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ஆயிரத்து 500 ரூபாய், ஓ.பி.சி மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆயிரத்து 400 ரூபாய், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு 800 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2020 ஜூன் 4 ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்