நெல்லை: தாமிரபரணியில் 4-வது நாளாக வெள்ளம்
பதிவு : டிசம்பர் 02, 2019, 02:57 PM
தாமிரபரணி ஆற்றில் 4-வது நாளாக கரைபுரண்டுள்ள வெள்ளம், படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் 4-வது நாளாக கரைபுரண்டுள்ள வெள்ளம், படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு ஆகியவை நிறைந்தன. வரத்து அதிகரித்ததால், அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், தாமிரபரணியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோரங்களை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மழை சற்று குறைந்துள்ளதால், படிப்படியாக வெள்ளம் குறையும் எனவும் கூறப்படுகிறது. 

பிற செய்திகள்

இன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்

இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

20 views

வரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள்? - அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய புதிய மாற்றங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கையை, முதலமைச்சரிடம் கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்கிறார்.

390 views

ஊரடங்கு காலத்தில் நடமாடும் திருமண மண்டபம் - பொதுமகள் வரவேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்காரமேடைகள் அமைதி தரும் தொழில் செய்து வரும் ஹக்கிம், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, நடமாடும் திருமண மண்டபத்தை வடிவமைத்துள்ளார்.

23 views

சென்னையில் காற்று மாசுவை குறைத்த ஊரடங்கு

பொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

52 views

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

70 views

அழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்

அழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.