குன்னூர்: மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
குன்னூர்: மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு
x
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை  பெய்து வருகிறது. குன்னூர் கிருஷ்ணாபுரம் ஆற்றில் தண்ணீா் பெருக் கெடுத்து ஒடுகிறது. இதனால் அப்பகுதியில்  போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குன்னூர்- மேட்டுப்பாளையம்  சாலை மூடப்பட்டு, வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. மண் சரிவு உள்ளிட்ட இடிபாடுகளை அகற்றி சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்