மேட்டுப்பாளையம் தொடர் கனமழை எதிரொலி : குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

கோவையில் கனமழை எதிரொலியாக மாடி வீட்டின் 10 அடி சுற்றுச்சுவர் இடிந்து, நான்கு வீடுகளின் மீது விழுந்ததில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம் தொடர் கனமழை எதிரொலி : குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் 10 அடி சுற்றுசுவர் இடிந்து அருகில் இருந்த மற்ற நான்கு வீடுகளின் மீது விழுந்தது.  இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீயனைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதை தொடர்ந்து மீட்பு பணிகளை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ, தாசில்தார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். இதனிடையே வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்