கதாநாயகன் ஆனார் லெஜன்ட் சரவணன்

விளம்பர படங்களை தொடர்ந்து திரைப்படத்தில் கதாநாயகனாக வலம் வர இருக்கிறார் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன்.
கதாநாயகன் ஆனார் லெஜன்ட் சரவணன்
x
தமிழகத்தில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துணி மற்றும் நகை கடைகளை நடத்தி வருகிறார், சரவணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய கடையின் விளம்பர படத்தில் தானே நடித்தார். இந்த விளம்பரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, திரைத்துறையிலும் தற்போது  கால் பதித்துவிட்டார், சரவணன். அவரே தயாரிக்கும் படத்தில்  அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏவிஎம் சரவணன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பிரபு, விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெடி ஜெரி ஆகியோர் படத்தை இயக்குகின்றனர். சரவணனுக்கு ஜோடியாக மும்பை புதுமுக நடிகை அறிமுகமாகிறார். 

Next Story

மேலும் செய்திகள்