சென்னை, கொரட்டூர் பகுதிகளில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீர்

சென்னை கொரட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னை, கொரட்டூர் பகுதிகளில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீர்
x
சென்னை கொரட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் வீடுகளில் இருந்த மின்சார சாதனங்கள்,  கட்டில் உள்ளிட்ட பொருட்கள் மிதக்கும் நிலை ஏற்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரவு முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஒரு சில குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்