"கதாநாயகன் ஆனார், லெஜன்ட் சரவணன்"
பதிவு : டிசம்பர் 01, 2019, 11:06 PM
விளம்பர படங்களை தொடர்ந்து திரைப்படத்தில் கதாநாயகனாக வலம் வர இருக்கிறார், லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன்.
தமிழகத்தில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர்சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துணி மற்றும் நகை கடைகளை நடத்தி வருகிறார், சரவணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய கடையின் விளம்பர படத்தில் தானே நடித்தார். இந்த விளம்பரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, திரைத்துறையிலும் தற்போது கால் பதித்துவிட்டார், சரவணன். அவரே தயாரிக்கும் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏவிஎம் சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பிரபு, விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெடி ஜெரி ஆகியோர் படத்தை இயக்குகின்றனர். சரவணனுக்கு ஜோடியாக மும்பை புதுமுக நடிகை அறிமுகமாகிறார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2028 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

482 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

60 views

பிற செய்திகள்

உடல் திறனை மேம்படுத்த விளையாட்டுப் போட்டி - மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார் நடிகர் ஜீவா

இளைஞர்களின் உடல் திறனை மேம்படுத்தும் விளையாட்டு போட்டிகளை நடத்த நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நடிகர் ஜீவா கோரியுள்ளார்.

53 views

ப.சிதம்பரத்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து

சென்னை திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்தார்.

90 views

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பற்றி லாரன்ஸ் விளக்கம்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில், கமல் போஸ்டரில் சாணி அடித்தது பற்றி பேசியதற்கு நடிகர் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

274 views

வீட்டு விலங்குகள் தத்தெடுப்பு முகாம் : திரை நட்சத்திரங்கள், பொது மக்கள் பங்கேற்பு

மும்பையில் வீட்டு விலங்குகள் தத்தெடுப்பு முகாம் நடைபெற்றது. ஆசிய அளவில் நடத்தப்பட்ட இந்த 2 நாள் தத்தெடுப்பு முகாமிற்கு 180க்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள் அழைத்து வரப்பட்டன.

24 views

4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் : அஜித் ரசிகர்கள் போஸ்டர்

தெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

963 views

தெலங்கானா என்கவுன்டர் - நயன்தாரா பாராட்டு

ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.