அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் விநோத திருமணம் நடத்திய கிராம மக்கள்

சேலம் அருகே, நெடுந்தார்காடு கிராமத்தில் அரச மரத்துக்கும் - வேப்ப மரத்துக்கும் நடந்த விநோத திருமணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் விநோத திருமணம் நடத்திய கிராம மக்கள்
x
சேலம் அருகே, நெடுந்தார்காடு கிராமத்தில் அரச மரத்துக்கும் -வேப்ப மரத்துக்கும் நடந்த விநோத திருமணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே, திருமண ஏற்பாடுகளை தொடங்கி, அழைப்பிதழ் அச்சடித்து வீடு வீடாக சென்று திருமணத்திற்கு அழைத்துள்ளனர். திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக நிச்சயதார்த்தம் செய்து,  சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து அரச மரத்திற்கும்,வேப்ப மரத்திற்கும் அலங்காரம் செய்து திருமணம் நடத்தி வைத்தனர். திருமணத்துக்கு பின் விருந்தும் நடைபெற்றது. இந்த விநோத நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்