திருச்செந்தூர் : முக்கிய சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக திருச்செந்தூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் : முக்கிய சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்
x
நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக திருச்செந்தூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்லும் முக்கிய சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழைநீரில் சிக்கி ஏராளமான வாகனங்கள் பழுதாகி நிற்பதுடன், பஜார் சாலை கடைகளில் மழை நீர் புகுந்துள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமாரி செல்லும் வாகனங்கள் காயாமொழி , உவரி சாலை வழியாக திருப்பி  விடப்பட்டுள்ளன. மக்கள்  அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்