கனமழையால் 50 விமானங்கள் தாமதம்

சென்னையில், நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் 50 விமானங்கள் தாமதம்
x
சென்னையில், நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் மழைநீர்  தேங்கியுள்ளதால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் 2 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக  விமானிகள் உள்பட  ஊழியர்கள் பலரும் தாமதமாக வந்ததால், சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபாய் செல்ல வேண்டிய விமானங்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.  அபுதாபியில் இருந்து வந்த விமானம் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்திற்கும், அகமதாபாத் மற்றும் கோவையில் இருந்து வந்த 2 விமானங்கள் கோவைக்கும் திருப்பி விடப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்