கட்டுக்கடங்காத வெள்ளத்திலும் கம்பீரமாக நிற்கும் குறுக்குத்துறை முருகன் கோயில்

300 ஆண்டுகளுக்கும் மேலாக தாமிரபரணி ஆற்றின் நடுவே கட்டுக்கடங்காத வெள்ளத்திலும் கம்பீரமாக நிற்கும் குறுக்குத்துறை முருகன் கோயில் சிறப்பு.
x
நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். மழைக்காலங்களில் இந்த கோயில் தண்ணீரில் மூழ்குவது வாடிக்கையான ஒன்று. கோயில் மதில் சுவர் முழுவதும் தண்ணீரில் மூழ்கினால் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் வருகிறது என புரிந்து கொள்வர் நெல்லை மக்கள்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உற்சவர், சப்பரங்கள், உண்டியல் போன்றவற்றை கோயிலில் இருந்து எடுத்து சென்று, கரையில் அமைந்துள்ள மேலக்கோயிலில் வைத்துவிடுவர்.மூலவர் சிலை மட்டும் கோயிலிலேயே இருக்கும். வெள்ளம் வடிந்தபின் கோயிலை முழுமையாக சுத்தப்படுத்தி, உற்சவரை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வருவர்.

1992-ல் 2 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் கரை புரண்டோடியபோது, கோயிலின் மேல்தள ஓடுகள் மட்டுமே சேதமடைந்தன.வெள்ளத்தை இந்த கோயில் தாங்கி நிற்பதற்கு காரணம் கோயிலின் கட்டமைப்பு என்று கூறப்படுகிறது. படகின் முன்பகுதி எப்படி கூர்மையாக இருக்குமோ அது போல் கோயிலின் மேற்கு பகுதி மதிற்சுவர் கட்டப்பட்டுள்ளது. இது பொங்கி வரும் வெள்ளத்தை வெவ்வேறு திசையில் சிதற செய்திடும். 

மண்டபத்தினுள் புகும் வெள்ளம் மறுபுறம் வெளியேறும் வகையில் கற்சுவரில் ஜன்னல் வடிவிலான திறப்புகள் காணப்படுகின்றன. 17-ம் நூற்றாண்டுக்குப்பின் நாயக்கர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோயில், தனது நுட்பமான கட்டுமானத்தால் வெள்ளத்தை கம்பீரமாக எதிர்கொண்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்