காதலன் முன் பாலியல் வன்முறை செய்யப்பட்ட பள்ளி மாணவி : கோவையில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

கோவையில் பள்ளி மாணவியை காதலன் கண் முன்னே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலன் முன் பாலியல் வன்முறை செய்யப்பட்ட பள்ளி மாணவி : கோவையில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
x
கோவையில் பள்ளி மாணவியை காதலன் கண் முன்னே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சீரானைக்கன்பாளையத்தில் உள்ள பூங்காவிற்கு கடந்த 26ஆம் தேதி தனது காதலனுடன் சென்ற பள்ளி மாணவி அங்கு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அந்த கும்பல் தனது செல்போனில் பதிவு செய்து வைத்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்