நீட் தேர்வு : வரும் 2-ஆம் தேதி முதல் ஆன்லைன் பதிவு

2020-ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு, மே மாதம் 3 -ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வரும் 2- ஆம் தேதி முதல், ஆன்லைனில் பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு : வரும் 2-ஆம் தேதி முதல் ஆன்லைன் பதிவு
x
தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு முதல், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்பு சேர்க்கை நடந்து வருகிறது.  நான்காவது ஆண்டாக, வரும் 2020 -ஆம் ஆண்டும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக மே மாதம் 3-ஆம் தேதி, நாடு முழுவதும், 155 நகரங்களில்  நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு, டிசம்பர் 2ஆம் தேதி முதல்
ஆன்லைனில் பதிவு  துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இணையதளத்தில், டிசம்பர் 31ஆம் தேதி வரை  மாணவர்கள் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு புதிதாக 9 மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கியதால், 2020-ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்