உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் - தமிழகத்துக்கு விருது

உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதற்கான விருதை தமிழக அரசின் சார்பில் அமைச்சர் விஜய பாஸ்கர் பெற்றுக்கொண்டார்.
உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் - தமிழகத்துக்கு விருது
x
டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மற்றும் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே ஆகியோர் இந்த விருதை  வழங்கினர். இவ்விருதை தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக பெறுகிறது.  உடல் உறுப்பு தானத்தை மிகச் சிறப்பாக செய்ததற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனை விருது வழங்கப்பட்டுள்ளது.  இரண்டு கைகளையும் இழந்த நாராயணசாமி என்பவருக்கு இறந்தவர் உடலில் இருந்து இரண்டு கைகளையும் பொருத்திய சாதனைக்காக  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரமாதேவிக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்