தர்மபுரி : ஆலம்பாடி மாட்டினங்களை பாதுகாக்க ஆராய்ச்சி மையம்

தர்மபுரி மாவட்டம் பல்லேனஅள்ளி பகுதியில் அரியவகை ஆலம்பாடி மாட்டினங்களை பாதுகாக்கும் விதமாக அமைக்கப்படும் ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
தர்மபுரி : ஆலம்பாடி மாட்டினங்களை பாதுகாக்க ஆராய்ச்சி மையம்
x
தர்மபுரி மாவட்டம் பல்லேனஅள்ளி பகுதியில் அரியவகை ஆலம்பாடி மாட்டினங்களை பாதுகாக்கும் விதமாக அமைக்கப்படும் ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இந்த ஆராய்ச்சி மையத்தில் ஆலம்பாடி மாடுகளை, புள்ளி காளைகளுடன் சேர்த்து இனப்பெருக்கம் செய்து, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கன்றுகுட்டிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், இம்மையத்தில் விவசாயிகளுக்கு மலிவு விலையில் தீவனங்களை விற்பனை செய்யடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்