புதிய உள்துறை செயலாளர் யார்? : நிரஞ்சன் மார்ட்டி இன்றுடன் ஓய்வு

தமிழக அரசின் உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய உள்துறை செயலாளர் யார்? : நிரஞ்சன் மார்ட்டி இன்றுடன் ஓய்வு
x
தமிழக அரசின் உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர்  நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல் துறையை உள்ளடக்கி இருக்கும் துறை என்பதால் உள்துறை  பதவி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்ட்டி இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அந்த பதவிக்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஹன்ஸ் ராஜ் வர்மா , அபூர்வ வர்மா , பிரதீப் யாதவ் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில்,  தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக உள்ள எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப் பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்