5ஆம், 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
x
5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 8ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 30ஆம் தேதி தமிழ் தேர்வும், ஏப்ரல் 2ஆம் தேதி ஆங்கில தேர்வும் ஏப்ரல் 8ஆம் தேதி கணிதமும்,ஏப்ரல் 15ஆம் தேதி அறிவியலும் ஏப்ரல் 17ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளும் நடைபெற உள்ளன. இதே போன்று 5ஆம் வகுப்புகான பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.ஏப்ரல் 15ஆம் தேதி தமிழும், 17ஆம் தேதி ஆங்கிலமும், 20ஆம் தேதி கணித தேர்வுகளும் நடைபெறுகிறது.5ஆம் மற்றும் 8ஆம் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, 12.15 மணி வரை நடைபெறுகிறது. இதில் முதல் 15 நிமிடங்கள் கேள்வித்தாளை படிப்பதற்கும், வினாத்தாளில் பெயர், தேர்வு எண் எழுதவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. Next Story

மேலும் செய்திகள்