பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் : பல ஆண்டு சேமிப்பு - பயனற்று போன சோகம்

திருப்பூர் அருகே பேரன், பேத்திகளுக்காக மூதாட்டிகள் இருவர் சேமித்து வைத்திருந்த பணம், செல்லாத நோட்டுக்கள் என தெரியவந்ததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
x
பல்லடம் அருகே பூமலூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரங்கம்மாள், தங்கம்மாள் ஆகிய மூதாட்டிகள் இருவரும், மகன்கள் வீட்டில் வசித்து வரும் நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிசிச்சைக்கு போதிய பணம் இல்லாததால், அவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாயை எடுத்து, மகன்களிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றை பார்த்து மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம்...அந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல், மூதாட்டிகள் இருவரும் பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இந்த பணம் செல்லாது என மகன்கள் தெரிவித்ததால் மூதாட்டிகள் இருவரும் அதிர்ச்சி  அடைந்தனர். பேரன், பேத்திகளுக்கு தருவதற்காக பல ஆண்டுகளாக சிறுக சிறுக பல்வேறு வேலைகளுக்கு சென்று சேமித்து வைத்த பணம், வீணாகி விட்டதே என, அவர்கள் சோகத்தில் உறைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்