வெங்காய விலை உயர்வு எதிரொலி - பொள்ளாச்சி சந்தையில் 200 டன்னுக்கு மேல் பல்லாரி , சின்னவெங்காயம் தேக்கம்

பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 200 டன் பல்லாரி, சின்ன வெங்காயம் பொள்ளாச்சி சந்தையில் தேங்கியுள்ளது.
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காந்தி சந்தைக்கு   பல்லாரி வெங்காயம் மகராஷ்டிரா மாநிலம்  நாசிக் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து விற்பனைக்கு வருகிறது. நாள் ஒன்றுக்கு 500 டன்கள் பல்லாரி வெங்காயம் 50 கிலோ அளவில் சாக்கு மற்றும் பிளாஸ்டிக் பையில்  கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. பொள்ளாச்சி சந்தையில் பல்லாரி வெங்காயத்தை  அதிக அளவில் கொள்முதல் செய்வது கேரளா வியாபாரிகள் தான் என கூறப்படுகிறது.  கடந்த மாதம்  ஒரு கிலோ பல்லாரி  43  முதல் 46 -ரூபாய் வரை  விற்பனை செய்யப்படடு வந்த நிலையில் மகராஷ்டிராவில்  பலத்த மழை பெய்தது காரணமாக பல்லாரி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ பல்லாரி 85 முதல் 90 ரூபாய்க்கும் சில்லரை விலையில் கடைகளில்  120 ரூபாய் வரைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . இதே போன்று சின்ன வெங்காயத்தின் விலையும் 90 முதல் 115 ரூபாய் என்ற அளவில் மொத்த விற்பனையிலும், சில்லறை விற்பனையில் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருவதால், சுமார் 200 டன்கள் பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் பொள்ளாச்சி சந்தையில் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். டிசம்பர் 15-க்கு பின்னர் புதிய வெங்காயம் வரத்து அதிகரிக்கும் நிலையில் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்