பொன்னேரி அருகே ரயிலை கவிழ்க்க சதி : நூலிழையில் தப்பிய பினாங்கினி விரைவு ரயில்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தண்டவாளத்தில் காந்தம் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றது தீவிரவாதிகளா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி அருகே ரயிலை கவிழ்க்க சதி : நூலிழையில் தப்பிய பினாங்கினி விரைவு ரயில்
x
சென்னையிலிருந்து ஐதராபாத் செல்லும் பினாங்கினி விரைவு ரயில், பொன்னேரி அருகே உள்ள ஆரணி ஆற்று பாலத்தில் சென்றபோது, தண்டவாளத்தில் பலத்த சத்தத்துடன் என்ஜின் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், கவரைப்பேட்டையில் ரயிலை நிறுத்தினார். அதோடு, கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வு செய்த சென்னை ரயில்வே பணிமனை பொறியாளர்கள், ரயில் தண்டவாளம் மற்றும் சக்கரத்தில் பேரிங் காந்தம் ஒட்டிய தடயத்தை கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புத்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆய்வில், ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது தெரியவந்தது. ஆரணி ஆற்றுப் பாலத்தில் ரயில் மெதுவாகச் சென்றதால், ஏராளமான பயணிகள் உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


Next Story

மேலும் செய்திகள்