மாவட்டத்தை பிரிப்பது மட்டும் சாதனையா? - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்
ஒரு மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதை பெரிய சாதனையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
ஒரு மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதை பெரிய சாதனையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதிய மாவட்டத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் எதனையும் உருவாக்காமல் பெயர் சூட்டினால் போதும் என்று முதலமைச்சர் நினைப்பதாக கூறியுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர், அரசு விழா என்பதையே மறந்து அரசியல் பேசி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேயர் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தேர்வு செய்யப்படும்' என்று அறிவித்திருந்த முதல்வர் பழனிசாமி, இப்போது திடீரென்று தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன்? என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு தோல்வி பயமே காரணம் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியதில் என்ன தவறு? என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்
Next Story

