மாமியாரை ஆட்கள் மூலம் காரில் கடத்திய மருமகள் - சொத்து தகராறே காரணம் என விசாரணையில் தகவல்

சென்னையில் மாமியாரை ஆட்களை வைத்து மருமகள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமியாரை ஆட்கள் மூலம் காரில் கடத்திய மருமகள் - சொத்து தகராறே காரணம் என விசாரணையில் தகவல்
x
சென்னை படப்பையை சேர்ந்த மேனகாவிற்கும், அவரது மாமியார் பத்மினிக்கும்  நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. 
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேனகா  மூன்று நபர்கள் உடன் காரில் வந்து சென்னை அயனாவரத்தில் தங்கியிருந்த பத்மினியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அயனாவரம் போலீசார் பத்தமினியை பத்திரமாக மீட்டுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்