ஆஸ்திரேலியாவில் இருந்த வந்த 6 மாத குழந்தை உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியா வழியாக விமானத்தில் வந்த 6 மாத குழந்தை, சென்னை விமானநிலையத்தில் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியா வழியாக விமானத்தில் வந்த 6 மாத குழந்தை, சென்னை விமானநிலையத்தில் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திமுருகன், தீபா தம்பதி குடியுரிமை சோதனைகளை முடித்து கொண்டு சுங்க பகுதிக்கு வந்த போது, குழந்தை அசைவற்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விமான நிலையத்தில் பரிசோதனை செய்த போது, மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விமானத்தில் நன்றாக விளையாடி கொண்டு வந்த குழந்தை திடீரென இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story