முதலமைச்சர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், அரசு சார்பில் முதலமைச்சர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
x
கோவை சிங்காநல்லூர் பகுதியில்  அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி தலைமையில், அரசு சார்பில் முதலமைச்சர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தனக்கு தகவலும் தெரிவிக்கப்படவில்லை மேலும் அனுமதியும் வழங்கப்படவில்லை என்று கூறி சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினர் கார்த்திக் தலைமையில், தி.மு.க.வினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்  இந்த நிலையில் அதிமுகவினரும்   திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தி.மு.க. வினர் கலைந்து சென்றனர். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தி.மு.க. வினர் இத்தகையை செயலில் இறங்கியதாக  அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகி சிங்கை ராமசந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்