தமிழகத்தில் பரவலாக மழை : மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகரின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தமிழகத்தில் பரவலாக மழை : மக்கள் மகிழ்ச்சி
x
சென்னை மற்றும் புறநகரின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. வங்கக்கடலில் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக, தமிழத்தின் பல இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகரில் கனமழை பெய்தது. குறிப்பாக, எழும்பூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு, போரூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், கோயம்பேடு, வேளச்சேரி, தரமணி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சாலையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதனிடையே சென்னையில், வழக்கம் போல்  பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஊட்டி:

ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஊட்டி, தொட்டபெட்டா, மைனாலா, தும்மனட்டி, கல்லட்டி பெய்த, சாரல் மழை காரணமாக, கடும் குளிர் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பக்கரை, சோத்துப்பாறை, முருகமலை, வடுகபட்டி, மேல்மங்கலம், தேவதானப்ட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. 

Next Story

மேலும் செய்திகள்