முருகன் போலீஸ் காவலுக்கு முட்டுக்கட்டை, முடிவுக்கு வராத திருச்சி முக்கிய கொள்ளைகள்

நகைக்கடை கொள்ளை தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள முருகனை காவலில் எடுத்து விசாரிக்க சென்ற திருச்சி போலீசார் வெறுங்கையுடன் திரும்பினர்.
முருகன் போலீஸ் காவலுக்கு முட்டுக்கட்டை, முடிவுக்கு வராத திருச்சி முக்கிய கொள்ளைகள்
x
நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக முருகனை திருச்சி போலீசார் அழைத்துச் சென்று விசாரிக்க பெங்களூரு நீதிமன்றம் 17-ம் தேதி அனுமதி வழங்கியது. அதன்படி, முருகனை கஸ்டடி எடுக்க திருச்சி போலீசார் பெங்களூர் சிறைக்கு இரவில் சென்றனர்.

அப்போது  வேறு ஒரு கொலை வழக்கு தொடர்பாக முருகனிடம் விசாரணை நடத்த  எட்டு நாள் போலீஸ் காவல்  பெற்று, அதற்கான அனுமதி உத்தரவுடன் பெங்களூரு போலீசாரும் வந்தனர். ஒரே நேரத்தில், திருச்சி மற்றும் பெங்களூரு போலீசார் கஸ்டடி எடுக்க வந்ததால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக முருகனை, பெங்களூர் போலீசாரிடம் சிறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதயைடுத்து திருச்சி போலீசார் வெறுங்கையுடன் திரும்பினர். இதனிடையேட அடுத்தமுறை முருகனை கண்டிப்பாக காவலில் எடுத்துவிடுவோம் எனதிருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்