பள்ளிக் கல்வித்துறை ஆணையரின் பணிகள்: முதன்மை செயலாளர் அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கான பணி விவரம் குறித்த அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை ஆணையரின் பணிகள்: முதன்மை செயலாளர் அரசாணை வெளியீடு
x
பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கான பணி விவரம் குறித்த அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும், ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையின் கீழ் கொண்டுவர இருப்பதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிஜி தாமஸ், பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கான பணிகள் விவரம் குறித்த அரசாணையை, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.

அதில் பள்ளிக்கல்வித்துறை, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தொடக்க கல்வித்துறை, அரசு தேர்வுகள் துறை ஆகியவற்றின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கள ஆய்வு செய்து கல்வி தரத்தை மேம்படுத்துவது கல்வித்துறை திட்டங்களை கவனிப்பது ஆகிய பணிகளை ஆணையர் கவனிப்பார்"  என அரசாணையில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்