மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதி விபத்து : கல்லூரி மாணவி உயிரிழப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதி விபத்து : கல்லூரி மாணவி உயிரிழப்பு
x
அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தார். பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்தனா, தங்கள் வயலில் விவசாய பணிகளை மேற்பார்வையிட்டுவிட்டு, இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த‌தாக தெரிகிறது. அவரது இருசக்கரவாகனம் மூன்று ரோடு பாலம் அருகே வந்தபோது, பக்கவாட்டில் அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் அவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கீர்த்தனா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்