திருமங்கலம் : சரக்கு லாரி மோதி பள்ளி மாணவி பலி

திருமங்கலம் அருகே வலையங்குளம் என்ற பகுதியில் சரக்கு லாரி மோதியதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா என்பவர், நிகழ்விடத்தில் பலியானார்.
திருமங்கலம் : சரக்கு லாரி மோதி பள்ளி மாணவி பலி
x
திருமங்கலம் அருகே வலையங்குளம் என்ற பகுதியில் சரக்கு லாரி மோதியதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா என்பவர், நிகழ்விடத்தில் பலியானார். இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்களும், திவ்யாவின் உறவினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தினால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேநேரம், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை பிடிக்க, தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்