"உள்ளாட்சி தேர்தலுக்காகவே சொத்து வரி மறுபரிசீலனை" - திமுக தலைவர் ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலுக்காகவே சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
மக்கள் மற்றும் தி.மு.க. வெகுண்டெழுந்து போராடிய போதும் சொத்துவரி திரும்ப பெறப்படவில்லை என்றும், உள்ளாட்சி தேர்தலுக்காக சொத்து வரியை திரும்ப பெற பரிசீலனை நடைபெறுகிறது என்றும் ஸ்டாலின், அதில் தெரிவித்துள்ளார். உயர்த்தி வசூலிக்கப்பட்ட சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணத்தை காசோலையாகவோ, ரொக்கமாகவோ மக்களுக்கு உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும், "மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்" என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவித்திட வேண்டும் என்று ஸ்டாலின் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story