பூமிக்கு அடியில் பாதுகாப்பான முறையில் அணு கழிவு புதைக்கப்படுகிறது - கூடங்குளம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதில்

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகளை பாதுகாப்பான முறையில் பூமிக்கு அடியில் புதைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் பாதுகாப்பான முறையில் அணு கழிவு புதைக்கப்படுகிறது -  கூடங்குளம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதில்
x
மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் ஞானதிரவியம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த  பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் , அணு உலையில் தற்போது சேமிக்கப்பட்டு வரும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்னதாகவே,  கழிவுகளை சேமித்து வைப்பதற்கான இடத்தை கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் அடையாளம் கண்டு வருவதாக குறிப்பிட்டார். தற்போது சேமிக்கப்பட்டு வரும் கழிவுகள் பூமியிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் சேமிக்கப்பட்டு 40 ஆண்டுகள் அங்கிருந்து மீண்டும் அவை மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்