பாங்காக் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு : விமானம் ரத்து செய்யப்பட்டதால் உயிர் தப்பிய பயணிகள்

சென்னையிலிருந்து பாங்காக் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
பாங்காக் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு : விமானம் ரத்து செய்யப்பட்டதால் உயிர் தப்பிய பயணிகள்
x
சென்னையிலிருந்து பாங்காக் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு தாய் ஏர்லைன்ஸ்  விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 268 பயணிகளும் 9 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானி விமானத்தை தளத்திலிருந்து ஓடுபாதைக்கு இயக்கினார். அப்போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுப்பிடித்தார். இது பற்றி விமான நிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் தந்தார். இதனையடுத்து விமானம் மீண்டும் பத்திரமாக தரையிறங்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 277 பேரும் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்