மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் : தனியார் நிறுவன ஊழியர் பலி

கோவை மதுக்கரை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் : தனியார் நிறுவன ஊழியர் பலி
x
கோவை மதுக்கரை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  மதுக்கரை மரப்பாலத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், தனது உறவினர் மகளை இருசக்கரவாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார் . அப்போது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகநாதன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயம் அடைந்த மாணவி   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் மூலம் மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்