தொழிலதிபரிடம் ரூ. 40,000 லஞ்சம் : சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்கு

சென்னையில் தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
தொழிலதிபரிடம் ரூ. 40,000 லஞ்சம் : சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்கு
x
சென்னையில் தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அயனாவரத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் மதுகுமார். இவர் கப்பல் இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து  கொடுக்க தடையில்லா சான்றுக்காக  சுங்க மதிப்பீட்டாளர் முனுசாமி என்பவரை அணுகியுள்ளார். அதற்கு அவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்டுகிறது. முனுசாமியின் கூட்டாணி வினோத் என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் அளித்த மதுகுமார், இதுதொடர்பாக நுங்கம்பாக்கம்  சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுங்க மதிப்பீட்டாளர் முனுசாமி மற்றும் அவரது கூட்டாளி வினோத் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்