திருமயம் தொகுதி எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு : முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ மனுத்தாக்கல்

திருமயம் தொகுதி எம்.எல்.ஏ ரகுபதி மீது புதுக்கோட்டை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருமயம் தொகுதி எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு : முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ மனுத்தாக்கல்
x
திருமயம் தொகுதி எம்.எல்.ஏ ரகுபதி மீது புதுக்கோட்டை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்துள்ளார். புதுக்கோட்டையில் கடந்த ஞாயிறன்று, 66வது கூட்டுறவு வார விழாவில் பேசிய ரகுபதி, திமுக எம்.எல்.ஏக்களின் பெயர்கள் விளம்பரங்களில் வெளியிடப்படவில்லை என்று குற்றம் சாட்டி, ஆட்சியர் உமா மகேஸ்வரி அதிமுகவின் மாவட்ட செயலாளர் போல நடந்து கொள்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில் ரகுபதி குறித்து புகார் அளிக்கப்பட்டதால், காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, ரகுபதி முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்