நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : மருத்துவ மாணவர் தந்தையின் ஜாமின் மனு தள்ளுபடி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை மருத்துவ மாணவர் தந்தையின், ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : மருத்துவ மாணவர் தந்தையின் ஜாமின் மனு தள்ளுபடி
x
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை மருத்துவ மாணவர் தந்தையின், ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, எவ்வித ஆதாரமும் இன்றி போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக கூறியுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரிய மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், தற்போது, ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜாமின் தர மறுத்ததால், மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மனு  தள்ளுபடி செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்