பசுபதி பாண்டியன் கொலை வழக்கு : திண்டுக்கல் நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜர்

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில், சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகினர்.
பசுபதி பாண்டியன் கொலை வழக்கு : திண்டுக்கல் நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜர்
x
பசுபதி பாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில், சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகினர். கடந்த 2012ஆம் ஆண்டு திண்டுக்கல் நந்தவனப்பட்டியில், பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று, சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 12 பேர் நீதிபதி முன் ஆஜராகினர். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, மீண்டும் டிசம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதனிடையே, 12 பேர் ஆஜராக வந்த நிலையில், திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்